திராவிடம் கடவுள் மறுப்பு கொள்கையுடையது, ஆனால் தமிழ் வரலாற்றில் ஆயிரம் வருடம் பின் சென்றால் எந்த சோழன், பாண்டியனாக இருந்தாலும் இறை வழிப்பாட்டில் ஈடுபட்டிருப்பர், அதனால் அப்படி பட்ட அரசர்கள், தமிழ் இனத்திற்கான அவர்களின் பங்களிப்பு அனைத்தையும் புறக்கணிப்பதா?
திராவிடம் பரிணாம வளர்ச்சி கொள்கையுடையது, தமிழகமோ கோவில்கள் நிறைந்த நாடு. Space time physics'ஐ தாண்டி quantum physical states'ஐ புரிந்து செயல்பட்ட சித்தர்கள் நமக்கு கொடுத்ததுதான் Holistic சித்த மருத்துவம், ஆசீவகம், Martial arts எல்லாமே.
திராவிடர்கள் பாராட்டும் அல்லோபதி மருத்துவம் முதலாளித்துவத்தின் ஆணிவேர்.
திராவிடம் ஜாதி ஒழிப்பு கொள்கையுடையது : உலகில் எல்லா மனிதர்களுக்கும் எல்லா நாட்டவருக்கு இருப்பது போல் தமிழர்களுக்கும் குடும்ப பெயர்களின் நீட்சியான குலப்பெயர்கள் இருக்கும்.
இணக்கமாக வாழ்ந்த சமூகத்தில் ஆரியன் கொண்டு வந்த வர்ணாஸ்ரம தர்மம் திணிக்கப்பட்டதால், மக்கள் வரலாறு மறந்து வர்ணாஸ்ரமத்தை பயன்படுத்தியதால், இன்றளவும் அதை சார்ந்தே திராவிட கட்சிகள் அரசியல் செய்த்து வருவதால், ஜாதி அடிப்படையிலே வேட்பாளர்களை நிறுத்தி அந்த ஜாதிய கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதால், ஆம் தமிழர்கள் ஜாதி வெறியர்கள் போலும் , திராவிடர்கள் மட்டுமே பகுத்தறிவாளர்கள்.
தமிழரில் தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி இல்லை, ஆனால் பூர்வகுடிகள் அடையாளமாக குலப்பெயர்கள் இருக்கின்றன. வந்தேறிகள் குலப்பெயர்களை மறக்காமல் இருக்கும்போது, பூர்வகுடிகள் இருக்க கூடாதா ?
வைகோ கேரளா முதல்வருக்கு எழுதும் கடிதத்தில் பெரியாரின் ஜாதி பெயரை சேர்த்து எழுதி புளங்காகிதம் அடைகையில், வந்தோரை வாழவைத்த தமிழனுக்கு குலப்பெயரை வைத்து கொள்ள உரிமை இல்லையா ?
சங்ககாலத்திலேயே அகநானூறு படைத்து காதல் வளர்த்தவன் தமிழன். பெரிய கோவிலின் கட்டுமானத்தில் பங்கேற்ற அனைத்து ஜாதிகளையும் அழைத்து கௌரவித்தவன் தமிழ் மன்னன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னது பெரியாரா? யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடியது பெரியாரா?
திராவிடம் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது:
அகழ்வாராய்ச்சி நடக்கின்ற கீழடியை மூடினாலும், ஆதிச்சநல்லூரை மூடினாலும் தமிழ் மொழியே ஒரு காலப்பெட்டகம் போன்றது. சொல்லியல் நிபுணர்கள் வரலாற்று நூல்களிலிருந்து காப்பியங்களிலிருந்து தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க முடியும். மா சோ விக்டர், ஒரிசா பாலு , அறிஞர் குணா போன்றோர் இத்துறையில் உள்ளவர்களே.
தமிழன் ஹிந்து என்று யார் சொன்னது ?
உண்மை தமிழ் வரலாறை ஆராய்ச்சி செய், வீடுபேறு அடைதல் என்ற மானுடம் போற்றும் வாழ்வியலை உலகிற்க்கே அளித்தவன் தமிழன். எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வாக்கு அரசியல் செய்பவனல்ல, எல்லோரும் கடவுள் ஆகலாம் என்று ஆன்மிகம் போதித்தவன் தமிழன்.
படைப்பவன் காப்பவன் அழிப்பவனெல்லாம் ஹிந்து கதைகளில் வருபவை. எந்த கடவுள் யாரை மணந்தார் , எத்தனை குட்டி கடவுள்களை பெற்று போட்டார் என்பன போன்ற ஹிந்து கதைகளை வைத்து கொண்டு தமிழனை கேலி செய்யாதே.
தமிழன் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும், அதை மறுப்பவன்தான் உண்மையில் இனவாதி என்று தெளிவாக சொல்லும் பலரும், மெரினா மணலில் தனித்தமிழ்நாடு தனி ஈழம் கேட்டு பலாகைகள் பிடித்ததற்காக தீவிரவாதி பெயரை வாங்கிக் கொண்ட இளைஞர்களும், மொழி ஆய்வாளர்களும், ஓயாமல் குரல் கொடுக்கும் இணையதள போராளிகளும்,
அரசியல் நிலைப்பாடு இல்லாமல் வெறும் தமிழன் என்ற அடிப்படையில் நில வேம்பு கசாயத்தை போன்ற மரபு வைத்தியத்தை பின்பற்றி ஆங்கில மருத்துவம் என்னும் முதலாளித்துவத்தை நொறுக்கும் சிலரும்,
பாரிசாலன் போன்ற புது வகை போராளிகளும்,
இன்ன பிறரும் தினம் தினம் முளைப்பதை யாராலும் தடுக்க முடியாது.
Star wars என்ற படத்தில் வரும் Return of the Jedi பாகத்தை போல சித்தரின் காலம் மீண்டும் தமிழகத்தில் ஆரம்பிக்கும். தமிழரும் தன் விடுதலைக்காக secret society அமைத்து குறியீடுகள் பயன்படுத்தினால் கூட ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. எதிரியை பொறுத்தே நம் போராட்டம் அமையும்.
அனைவரும் தமிழரே என்று சாமர்த்தியமாக திராவிடம் பேசும் தமிழர்களின் கண்கள் பெரியாரின் தாடிக்குள் இருந்தால் காப்பாற்ற இயலாது.
உலகுக்கே விடுதலை தரவேண்டிய சமூக பொறுப்பு இருக்கிறது நமக்கு. நமது இன விடுதலை மட்டுமில்லாமல் பல தேசிய இனங்களின் விடுதலைக்காகவும் போராட வேண்டும். கொஞ்சம் சிந்தித்து பார்த்தல் தெரியும், காஷ்மீர் விடுதலைக்காகவும், காத்தலோனியா , குர்டிஸ்தான் விடுதலை பற்றியும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் தேசியங்களின் ஆட்சி , கூட்டாட்சி தத்துவம் பற்றி எல்லாம் அதிகம் சிந்திப்பது தமிழ் தேசியவாதிகள் தான்.
தமிழர்கள் ட்ராவிடத்திற்காக உழைப்பது கரையான்கள் உழைத்து பாம்பிற்கு கோட்டை அமைத்து கொடுக்கும் வேலை. கருப்பு சட்டை அணிவித்து நம்மை போராளி போல் பெருமைப்பட வைத்து நம்மை சுரண்டி சாப்பிட்டு , குழிதோண்டி புதைத்து விடுவான் திராவிடன்.
திராவிடர் என்பது பக்கத்து மாநில மக்களோ, தமிழகத்தில் வாழும் வேற்று மொழியினரோ இல்லை. அவர்களை முறையாக கன்னடர் மலையாலி தெலுங்கர் மராட்டியர் என்று மரியாதையுடன் அழைக்க வேண்டும்.
தமிழரை ஏய்த்து பிழைப்பதையே கொள்கையாக கொண்டு தமிழகத்தின் வளங்களை அழித்து, தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் வேற்று இனத்தவரை மட்டும்தான் இந்த திராவிட அடையாளம் குறிக்கும். தமிழ் தேசியவாதிகள் இத்தகைய திராவிடர்களை மட்டும்தான் எதிர்க்கிறோம்.
தமிழன் அரக்கன் இல்லை, அது ஆரியன் தமிழனுக்கு கொடுக்கும் அடையாளம், உளவியல் போர். அந்த அடையாளத்தையே பெருமையாக வாங்கிக்கொண்டு, ஆமாண்டா நாங்க அரக்கர்கள்தான்டா என்று முட்டாள்களை போல கொக்கரிப்பது திராவிடம்.
நான் இங்க பூர்வ குடி, நீ என்னை வஞ்சித்து வாழும் வந்தேறி என்று, முறையாக வரலாறை கோரியும், ஆரியர்களால் திருடப்பட்ட தமிழரின் ஆன்மிக கலாச்சாரத்தையும் மீட்டு, சுத்தப்படுத்துவதே தமிழனின் கடமை.
பகுத்தறிவு என்பது பெரியார் எனப்படுபவரால் எழுதப்பட்ட ஒரு இலக்கண புத்தகமோ, மத நூலோ இல்லை. முதலில் பெரியாரை பகுத்து அரி, பின்பு உலகை பகுத்தறியலாம்.