நிலவேம்பு கஷாயம் டெங்குவிற்கும் திராவிட மாயையை போக்குவதற்கும் சிறந்த மருந்தாகும்.
கள்ளுக்கடை மறியல் என்றால்
கள்ளுக்கடைகளை புறக்கணிக்கலாம்,
கல் இறங்குவதை தவிர்க்கலாம்,
500 தென்னை மரங்களை வெட்டி வேரோடு புடிங்கி எரிபவன் யாராக இருக்க முடியும்?
பகுத்தறிவாளனா?
கள்ளுக்கடைகளை புறக்கணிக்கலாம்,
கல் இறங்குவதை தவிர்க்கலாம்,
500 தென்னை மரங்களை வெட்டி வேரோடு புடிங்கி எரிபவன் யாராக இருக்க முடியும்?
பகுத்தறிவாளனா?
நமது பிரச்சனை திராவிடம் கூட இல்லை , திராவிட மாயையில் சிக்கி உள்ள தமிழர்கள்தான்.
"ஆரிய எதிர்ப்பு என்று நமக்கு ஒரு எதிரியை முன்னிறுத்தி பூச்சாண்டி காட்டுதலும்,
தமிழ் காட்டுமிராண்டி மொழி,
தமிழ் சமூகம் பெண்களை அடிமைப்படுத்தி வந்தது,
ஆன்மிகம் என்றால் ஆரிய ஹிந்துக்களின் படைப்பு "
என்பதுபோன்ற உளவியல் கட்டமைப்பை தமிழர் மீது திணிப்பது தான் திராவிட மாயை.
தமிழ் காட்டுமிராண்டி மொழி,
தமிழ் சமூகம் பெண்களை அடிமைப்படுத்தி வந்தது,
ஆன்மிகம் என்றால் ஆரிய ஹிந்துக்களின் படைப்பு "
என்பதுபோன்ற உளவியல் கட்டமைப்பை தமிழர் மீது திணிப்பது தான் திராவிட மாயை.
உரிமையை மீட்டெடுப்பவன் தமிழன் , நமக்கு அது தேவையில்லை என்று தமிழரை ஏமாற்றி தமிழரின் உரிமைகளை புறக்கணிப்பவன் திராவிடன்.
தமிழ் மரபிலும் மருத்துவம், கட்டடக்கலை, வானியல் என்று அனைத்து அறிவும் உள்ளது என்பதை புறக்கணிப்பது.
தமிழன் என்றாலே முட்டாள், மூடப்பழக்கம் நிறைந்தவன் என்று பட்டம் கட்டுவது.
ட்ராவிடன்தான் டார்வின்'ன் சகலையாயிற்றே, சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
ஆன்மிகம், அறிவியல் இரண்டிலும் உரிமை கோருபவன் தமிழன். தமிழன் தன் உரிமைகளை மீட்டெடுத்தால் உலகமே அதிரும். டெங்கு கொசுக்கு தீர்வு சொன்னாலே உனக்கெப்படி இவ்ளோ அறிவு , நீ மூடன் என்று சண்டைக்கு வருகிறார்கள் திராவிடர்கள்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபொது ,
தமிழ்நாட்டை பலவீனமாக்க சில முக்கிய ஊர்களை தாரைவார்த்து கொடுத்தது,
பூர்வகுடி தமிழர்களை சேரிகளில் தவிக்கவிட்டது,
சேரிகளை சீரமைக்கிறேன் என்று அம்மக்களை அவர்களின் விருப்பமில்லாமல் புலம்பெயர்ப்பது.
பொதுவுடைமை என்ற கம்யூனிசம் பேசுவது ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு கட்சியில் பதவி தராதிருப்பது.
தமிழனின் உரிமை கோரி போராட்டம் செய்ய கூடிய இரு ஜாதிகளை வி.சி.க , ப.ம.க என்று கட்சிகளாய் பிரித்து ஜாதி சண்டையில் மோத விடுவது,
அதை வைத்து சமத்துவம் பேசி திராவிடம் வளர்ப்பது.
இதுதான் திராவிடர்களின் முழுநேர அரசியல், பிழைப்பே !
மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறந்துதானே இருக்கிறது, அதற்க்கு ட்ராவிடம்தானே காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுவோர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், ஆரிய ஆட்சியில் இருக்கும் வட மாநிலங்களும் தமிழகமும் ஒன்றல்ல.
திராவிட ஆட்சியையும் மீறி சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
ஒன்றிரெண்டு நல திட்டங்களை கூட கொண்டு வராமல் தமிழகத்தில் கட்சி நடத்த முடியாது.
இந்திய / திராவிட ஆட்சிக்கு பதில் தமிழருக்கு சுயாட்சி இருந்திருந்தால் உங்களை போல் போலியாக இல்லாமல் உண்மையான சமத்துவத்துடன் ஆரியத்தை எதிர்த்து ஜாதி வேற்றுமை இல்லாமல் வள்ளுவத்தின் படி வாழ்ந்திருப்போம்.
ட்ராவிடம்தான் ஜட்டி போட்டுவிட்டது என்று மீண்டும் சொன்னால் தொல்காப்பியத்தாலேயே அடித்து கொள்வோம் உங்களை.
திராவிட கட்சிகள் இணைய வேண்டும் என்று எப்போது வைகோ கூவினாரோ (தன்னையறியாமல் மேலோங்கும் திராவிட இனப்பற்று), அப்போதே தமிழ் தேசியம் வளர்ந்துவிட்டது.
தாழ்ந்த ஜாதி என்ற அச்சம் எல்லாம் திராவிட அரசியலில்தான்,
தமிழ் தேசியம் ஜாதியை ஒரு தமிழின அடையாளமாக பார்க்குமே தவிர, பணிபுரியும் இடத்திலோ, கல்வி நிலையங்களிலோ, காதல் திருமணங்களிலோ ஜாதியை பொருட்படுத்தப்போவதில்லை.
வெளி உலகில் திறந்து விடப்பட்ட சாதாரண விஷயமாகவே ஜாதி இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும், இதுவே உளவியல் ரகசியம். பெரியாரின் சிந்தனைகள் இதற்க்கு நேர் மாறாக இருந்தது காரணமாகத்தான்.
ஹாலிவுட் நடிகர் Morgan Freeman சொல்வது போல் "The way to stop racism is to stop talking about it".
வந்தேறிகளுக்கு சவாலாக இருந்த ஜாதிகள்தான் இப்போது மிகவும் தாழ்ந்த ஜாதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன.
காலம் காலமாக நிலத்தை ஆண்டு விவசாயம் செய்து சோறு போட்டவன் இன்று நிலமில்லாமல் தவிக்கிறான். கோவிலில் ஆன்மிகம் கற்பித்த பண்டிதர்களுக்கு இப்போது கருவறையில் அனுமதி இல்லை.
நோயை குணப்படுத்திவிட்டால் மருத்துவமனைகள் எப்படி லாபம் பார்க்கும் என்பது போல, இடைநிலை ஜாதிகளுக்குள் மோதலை வளர்த்து விடுவதும் தமிழர்களை ஓர் இனமாக நிற்க விடாமல் அரசியல் செய்வதும் தான் திராவிட ஆட்சி.
பொருளாதார சமநிலையில் ஜாதி வெறும் வரலாற்று அடையாள பேராக மட்டுமே இருக்கும்.
தமிழினம் ஒன்றுபட்டால் திராவிடம் செயலற்று போகும். தமிழ் தேசியம் தற்சார்பு பொருளாதாரத்தை முன்வைக்கிறது.
குளங்கள் சீரமைப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்கல் , ஆடு மாடு மேய்ப்பதை அரசாங்க தொழில் ஆக்குதல், மருத்துவம் கல்வி ஆகியவற்றை முற்றிலும் இலவசம் ஆக்குதல் (கியூபா போல்). கள் உற்பத்தி, மேல்நாட்டு மதுபானத்தை ஒழித்தல், கஞ்சாவிலிருந்து ஒரு முழு பொருளாதார புரட்சியையே உருவாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளை கொண்டுள்ளது.
அப்துல் கலாம் வசனம், சமுத்திர கனி வசனம் கேட்டெல்லாம் சமூகம் மாறாது, பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும்.
தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பது இனவாதம் என்றால், இந்தியா கூட சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் கை கோர்த்து சமத்துவ அரசியலை ஆரம்பிக்கலாமே. தேசியவாதம் தவறில்லை, இனவாதம் தவறா ?
திராவிட கட்சிகள் என்றாவது தனித்தமிழ்நாடு கேட்டதுண்டா? உலகம் முழுக்க பரவியிருக்கும் இனத்திற்கு ஒரு நாடு அவசியம் அல்லவா ? இங்கு தமிழ்நாட்டிலேயே வேற்று இனத்தவரின் நலனுக்காகத்தான் அரசியல் நடக்கிறது. தமிழன் தன் பழைய வரலாற்றை மீட்டெடுக்க கூடாது என்பதுதான் திராவிடரின் கொள்கை. அதற்கேற்றாற்போல் தலித் என்ற அடையாளத்தை பிடித்து தொங்கி, விளைவாக திராவிட வலையில் மட்டுமில்லாது இந்திய தேசியவாத வலையிலும் சிக்க்கிக்கொள்கிறார்கள்.
நம் பாரம்பரிய சித்த மருத்துவம் என்பது தமிழின் ஒரு அங்கம்.அதை யார் மறுத்தாலும் எள்ளி நகைத்தாலும் தமிழர்கள் அனைவரும் அதை காக்க வேண்டும். நாம் குடிக்கும் நிலவேம்பு கஷாயம் திராவிடற்கு விஷமாக அமையும்.
திராவிடம் என்பதே ஆரிய பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தை தான்.
திராவிட நாடு என்று பேர் வைக்கலாமா தமிழ் நாடு என்று வைக்கலாமா என்ற கேள்வி வருவதே அதிகாரத்தில் இருக்கும் வந்தேறிகளால்தான். தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவே சங்கரலிங்கனார் என்ற தமிழன் உயிர் தியாகம் செய்யவேண்டியிருக்கிறது.
200 வருடங்களுக்கு முன் சொல்லாடல் இல்லாத திராவிடம், தமிழகத்தில் மட்டும்தான் செல்லுபடி ஆனது, அதுவும் தமிழனின் முதுகில் குத்த பயன்படும் கருவியாக.
திராவிட கட்சியின் ஆணிவேரான நீதி கட்சியே ஆங்கிலேயரின் ஆட்சியில் ஆரியர்கள் முன்னுரிமை பெருவதை பொறுக்காமல் தெலுங்கர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதானே.
நமது பகை பக்கத்து மாநில மக்கள் அல்ல, தமிழர் பெயரில் தமிழரை ஏமாற்றும் திராவிடர்களே.
கேரளா கன்னியகுமாரியில் குப்பையை கொட்டுகிறது ,
கர்நாடக கழிவு நீரை காவிரியில்தான் கலக்கிறது,
நீங்கள் டார்வின் பெயரை சொல்லிக்கொண்டு அறிவாளி என்று சுற்றுவது, Dawkins பெயரை சொல்லிக்கொண்டு கடவுள் மறுப்பு பேசுவது, Karl marx'கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது எல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் போலித்தனம்.
நிலவேம்பு கஷாயம் ஏதோ சிலருக்கு உயிர் காக்கும் மருந்தாக பயன்படுகிறது, அதை கேலி செய்து உங்கள் அறிவியல் ஆற்றலை நிரூபிப்பதாக நினைத்து கோமாளி ஆகவேண்டாம்.
அல்லோபதி மருத்துவத்தில் டெங்குவுக்கு மருந்தில்லைனு அவனே சொல்லிட்டான், காய்ச்சலை கட்டுப்படுத்தி , தானாக platelets count அதிகரித்தால் உயிர் தப்பலாம் என்பதுதான் ஆங்கில மருத்துவம் அதற்க்கு 40 ஆயிரம் ரூபாய் கட்டணம்.
வீட்டில் பப்பாளி இலை சாறு குடித்தால் platelets count உயரும். சில தனியார் மருத்துவமனைகளில் கூட பப்பாளி இலை சாறு capsule வடிவில் தருகிறார்கள். , தற்காப்புக்கு நிலவேம்பு கஷாயம் என்பது தமிழ் மருத்துவம், லட்சக்கணக்கில் மக்கள் இதனால் பயன் பெற்று வருகிறார்கள்.
தமிழர் அடையாளங்களை புறக்கணிப்பவன் திராவிடன் , மீட்டெடுப்பவனே தமிழன்.
No comments:
Post a Comment