Sunday, 15 October 2017

கருப்பு பணம் என்னும் இந்தியனின் பறிபோன கற்பு

நவம்பர் 25, இரவு 8:16

கருப்பு பணம் இரண்டு வகைப்படும்
இரண்டு வகையா ??
முதல் வகை கருப்பு பணம் விஜயகாந்த், அர்ஜுன் படங்களில் வருவது. தூரத்து தேசங்களில், ரகசிய வங்கிகளில், டாலர்களாகவும் தங்கமாகவும், பினாமி பெயரில் சொத்துக்களாகவும் பதுக்கப்படுவது.

உலக வர்த்தக சிக்கலின் போது இந்தியாவை காப்பாற்றியது கருப்பு பணம்தான் என்றார் அகிலேஷ் யாதவ், அவர் சொன்னது இரண்டாம் வகை கருப்பு பணம். 

நம் அரசாங்கம் திடீரென " கணக்கில் வராத" என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்த தொடங்கியது. இது இரண்டு வகையான கருப்பு பணத்தையும் ஒன்று போல குழப்ப அவர்கள் செய்த நூதன உளவியல்.

இங்குள்ள மக்களின் பொருளாதாரம் அமெரிக்காவை போல் துபாய் போல் திடீரென உருவான பொருளாதாரம் இல்லை. இது வங்கிகளை நம்பி வாழும் பொருளாதாரம் இல்லை.  வங்கிகள் நமக்கு தேவைப்பட்டதில்லை, வங்கிகளுக்குத்தான் நாம் தேவைப்பட்டோம், இதுவே வரலாறு.

நாம் GDP கு நன்றிக்கடன் பட்டதில்லை, அது நம் கவலை இல்லை.

மரத்திலிருந்து பழத்தை புடிங்கி சாப்பிடவோ, ஒருவரிடம் முடி வெட்டி கொள்ளவோ, பத்து குழந்தைகளுக்கு பாடம் நடத்தவோ அரசாங்கம் தேவைப்பட்டதில்லை. 

இன்று கழிப்பறை முதல் செருப்பு டோக்கன் வரை கட்டணம் மற்றும் வரி.

நம்மை சில்லறை சில்லறையாக கண்காணிக்க கொண்டுவந்த திட்டமே இந்த டிஜிட்டல் இந்தியா. ஆனாலும் பாருங்க, அதற்கு கருப்பு பண கட்டுப்படுத்தல் என்ற சுண்ணாம்பை பூசியுள்ளார்கள். இந்த ஏமாற்றுவேலையை செய்ய அவர்களுக்கு தேவையான பொருட்கள் இரண்டே இரண்டு.

1. தேசப்பற்று
2. ஜனநாயகம்.

தேசப்பற்று சுலபமாக மக்களை மந்தையாக்கி கட்டுப்படுத்திவிடும். அது முற்றிலும் அச்சங்களையும் (வறுமையில் விழுந்துவிடுவோமோ என்ற பயம்) ஆசைகளையும் (பெரிய பணக்கார பிரபலமாகலாம் என்ற ஆசை) கொண்டு செயல்படுவது. பிரதியின் பிரதியியாக மீள முடியாத நிழலாக மக்களை மாறிவிடுவீர்கள்.

நம்  உயிரியளவுகள் தகவல் (biometric information) பணத்தை விட மதிப்பு மிக்கது.

கணக்கில் வராத என் பணத்தையும், கணக்கில் வராத உங்கள பணத்தையும், கணக்கில் வராத அம்பானியின் பணத்தையும், மல்லய்யாவின் பணத்தையும் ஒன்றாக சமமாக கருப்பு பணம் என சாடுகிறது ஒன்றிய அரசு.

மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய போது, பெரிய கார்பொரேட் முதலைகள் சிறையில் அடைக்கப்படுவது , சுவிஸ் வங்கியிலிருந்து பணம் வெளிவந்து நம் ஒவ்வொருவரின் கையிலும் குவிதல் போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார்; அதுவே நமக்கு காட்டப்பட்ட கனவு, அல்வா, அல்லவா ? 

அனைவரும் வரிசையில் நின்று நம் கையிருப்பு பணத்தை வங்கிகளில் செலுத்தி , அதை எப்படி திரும்ப பெறலாம் என்று ஏங்கி நிற்பது போல் என்றாவது கனவு கண்டீர்களா ?

காலாகாலமாக நாம் பின்பற்றிய பொருளாதாரம், சேமிப்பு பழக்கம் அனைத்தும் ஓரிரவில் சிதையுண்டது. வங்கியின் கணக்கில் வரவில்லை என்பதால் ஒருவர் தன் வீட்டில் கால காலமாக சேர்த்து வைத்துள்ள பணம் கருப்பு பணமா ? 

அமெரிக்காவில் வங்கிகள் சுருண்டு விழுந்த போது , பொருளாதாரமே விழுந்தது, மக்கள் விழுந்தனர், அமெரிக்காவே நிலை தடுமாறியது. இந்தியாவில் அப்படி நடக்காது, நமக்குத்தான் சுயமாக ஒரு பொருளாதாரம் உள்ளதே, அதுதான் இன்று கருப்பு பணமாக அரசால் சாடப்படுகிறது.(வகை 2)

நீங்கள் தவறு செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியும், பின் ஏன் வரிசையில் நின்று, காண்காணிப்புக்கு உள்ளாகிறீர்கள் ?  

சில சிறு வணிகர்கள் தவறு செய்திருக்கலாம், ரசீது தராமல் பணம் சேர்த்திருக்கலாம், கார் வாங்கியிருக்கலாம், இல்லை என்று சொல்லவில்லை ஆனால் பெரிய குற்றவாளிகள் அரசின் அரவணைப்பில் தான் உள்ளனர். 

ஒரு நாளொன்றுக்கு 32 ருபாய் செலவுக்கு கீழ் வாழ்பவர் மட்டும்தான் வறுமையில் இருக்கிறாராம். 

மக்கள் பெரும்பாலானோருக்கு சாதாரண செல்போனில் நேரம் மாற்ற கூட தெரியாது, தவறாக ATM பயன்பாட்டிலோ, மொபைல் பயன்பாட்டிலோ பதினைந்து ரூபாயை சுலபமாக இழந்து விட வாய்ப்பிருக்கிறது. 

ஜனநாயகம் என்பது மக்களுக்கு வேண்டியதை மக்களே தேர்வு செய்து கொள்ளும் உரிமைகளை அளிப்பது.

வரிசையில் நின்று நீ குற்றமற்றவர் என்று நிரூபித்து விட்டு போ என எப்படி சட்டத்தை பாய்ச்சலாம் ??  

No comments:

Post a Comment

அரக்கர்கள் Syndrome எனப்படும் விசித்திர மன நோய்

திராவிடம் கடவுள் மறுப்பு கொள்கையுடையது, ஆனால் தமிழ் வரலாற்றில் ஆயிரம் வருடம் பின் சென்றால் எந்த சோழன், பாண்டியனாக இருந்தாலும் இறை வழி...