நவம்பர் 8, இரவு 8:30
"500, 1000 தாள்கள் செல்லாது"
அறிவிப்பை கேட்ட அடுத்த நிமிடம் மக்கள் அதை எங்கும் வாங்க மறுத்தனர்.
எதற்காக இந்த சட்டம், என்ன பயனுக்காக என்று கூட தெரியாத நேரம் அது.
நள்ளிரவு 12 க்கு பின் நம் கையில் இருக்கும் பணம் செல்லாது.
பணம் அவமதிப்புக்குள்ளானது.
பின் இது கருப்பு பண ஒழிப்பு என்று தெரியவந்தது, ஜெய் ஹிந்த் !
டிஜிட்டல் இந்தியா என்னும் வலையை படிப்படியாக அரசாங்கம் விரித்ததை நொடி நொடியாய் மக்கள் கண்டார்கள்.
நவம்பர் 12 , இரவு 11:03
நிலத்தை அபகரி, முதலாளித்துவத்திற்கு முட்டு குடு, ரேஷன் கடைகளை மூடு , அணு உலை ஒப்பந்தம் போடு.
நவம்பர் 13 , மாலை 6:54
விற்பனை வரி, கேளிக்கை வரி, கலால் வரி, சுங்க வரி, சொத்து வரி, நில வரி, வாகன வரி, சாலை வரி,
என்னுயிர் மீது என்னை விட அதிக அக்கறை உள்ளது போல் நீ வாங்கும் தலை கவச அபராதம், வங்கி கணக்கு அபராதம், எல்லாம் மீறி தனியாக ஒரு வருமான வரி. இறுதியில் நமக்கென்ன கிடைக்கிறது ? அனைவருக்குமான இலவச மருத்துவமோ, சமச்சீர் கல்வியோ கூட இல்லை. ஆனால் மக்களாகிய நாம் மட்டும் வரிசையில் நின்று கஷ்டத்தில் இருக்கும் வங்கிகளை காப்பாற்ற வேணுமாம்.
ஏதோ இத்தனை நாள் இந்த அரசாங்கம், தன் மக்களை சொர்கத்தில் வைத்து அழகு பார்த்தது போலும், மக்கள் அரசை காப்பாற்ற கடமை பட்டுள்ளது போலும் ஒரு நாடகம்.
தேர்தல் பூத் ஸ்லிப் வழங்க வீடு வீடாய் வருவியே அதுபோல் வந்து பழைய நோட்டுகளை புதுசா மாத்தி குடு.
நவம்பர் 15 , இரவு 8:20
நாம் நமது வாழ்வாதாரத்தை இழக்கவிருக்கிறோம்.
உலக வங்கியின் கட்டமைப்பில் மக்களை சிக்கவைக்கும் திட்டமே இது.
நவம்பர் 16, பின்னிரவு 1:17
சுமாரான ஒரு வித்தைக்கே (தேசப்பற்று ) மயங்கி போன நம் மக்களை நினைத்து வருந்துகிறேன்.
நவம்பர் 16, மாலை 5:09
தேசியமயமாக்களுக்கு எதிரான லியோ டால்ஸ்டாயின் கட்டுரைகள்..
நவம்பர் 18. இரவு 10:53
கருப்பு பணத்தை அழிக்கும் திட்டத்தை ஆதரிக்கும் நண்பர்களே, இணைய வர்த்தக தளங்களில் மக்கள் இணைய இணைய, அதானி 'க்கு காசுதான்.
சுயமாக திரிந்துகொண்டிருக்கும் இந்தியர்களை உலக வங்கியின் பிடியில் கொண்டுவரும் திட்டமா ? இருக்கலாமே.
உலக வங்கியின் முதல்வர் மோடியை கூப்பிட்டு பாராட்டியது எதற்க்கோ?
வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவதெல்லாம் ஒரு சாதனையா?
வரிசையில் நிற்பதில் ஒரு ராணு வீரனை போல் பெருமிதம் சிலருக்கு இருக்கலாம், ஆனால் நீங்கள் பங்கேற்கும் இந்த திட்டம், இந்தியாவின் மிகப்பெரும் மோசடியாய் கூட இருக்கக்கூடும்.
உறுப்பினர்கள் இல்லாமல் வங்கிக்கிளைகள் இல்லை, நமக்காக அவர்கள், நாம் அவர்களுக்காக இல்லை.
நவம்பர் 20. மதியம் 2:16
இப்போது புரிகிறது ரகுராம் ராஜன் ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று.
புதியதாய் வந்துள்ள உர்ஜிட் சிங்க் படேல் ஒரு குஜராத்தி , ரிலையன்ஸ் குடும்பத்தில் ஒரு முக்கிய நிர்வாகியாக இருந்தவர்.
நவம்பர் 23, பின்னிரவு 2:03
முதலாளித்துவமே ஜனநாயகம், ஜனநாயகமே முதலாளித்துவம். மோடியே அம்பானி, அம்பானியே மோடி.
அதே நாள், பின்னிரவு 2: 26
217 வங்கிகளை இணையத்தில் ஊடுருவி நாலாயிரம் மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிரிக்காவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தானம் செய்த, தூக்கிலிடப்பட்ட போதும் புன்னகைத்த ஹம்சா'வை போல் நமக்கு தைரியம் இல்லைதான், ஆனால் ஒரு வங்கி ஊழியர் வேலை நிறுத்த போராட்டம் கூடவா இல்லை ?
நவம்பர் 23, பின்னிரவு 2:37
வெறும் உண்மை இனி மக்களை கவரப்போவதில்லை. டீ விற்றவர் பிரதமர் ஆவது போன்ற மனதை இளக செய்யும் கதைகள் தேவை. DIGITAL MARKETING/
ஒரே இரவில் நாட்டை தலைகீழாக்கும் மாமனிதர் கதாநாயகனாக தேவை,
தேசப்பற்று அடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறது - டால்ஸ்டாய்.
நவம்பர் 26, காலை 11:01
"மோடியின் நோக்கம் சரிதான், ஆனால் செயல்பாடு முறைதான் தவறாக உள்ளது ", இதையே எத்தனை தடவடா சொல்லுவீங்க.
நீ சில்லறை கிடைக்காமல் அலைந்தால் தான்
வங்கி கணக்கு திறப்பாய்,
இணைய வர்த்தகத்துக்குள் எட்டி பார்ப்பாய்.
வாழ வழியில்லாமல் டிஜிட்டலாக மாறிவிடுவாய்.
வங்கி கணக்கு திறப்பாய்,
இணைய வர்த்தகத்துக்குள் எட்டி பார்ப்பாய்.
வாழ வழியில்லாமல் டிஜிட்டலாக மாறிவிடுவாய்.
ATM எந்திரங்கள் செயல்படாதது நிர்வாக கோளாறு இல்லை, PayTM தான் சரி என்று உன்னை நம்ப வைக்கும் சூழ்ச்சி.
உடனே உன் பணம் செல்லாது என்று சொன்னால்தான் பதறி போய் சிந்திக்க நேரமில்லாமல் அடிமையாக வரிசையில் நிற்போம். மக்களுக்கு நேர அவகாசம் தந்திருந்தால், கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவந்திருக்க முடியாது என்று மோடி சொல்வது உண்மையல்ல.
நவம்பர் 26, இரவு 9:31
சூப்பர் , கருப்பு பணம் ஒழியுமா என்று தெரியாது.. ஆனால் கண்டிப்பாக நாமெல்லாம் டிஜிட்டல் ஆகப்போறோம்.
நம்மை யாரோ கண்காணிப்பது நமக்கு பிடித்திருக்கிறது, நீங்கள் உங்கள் லொகேஷன் செட்டிங்கை ஆன் செய்ய விரும்புகிறீர்களா ?
கண்காணிப்பு கேமராக்கள் உங்களை வெறிக்க வெறிக்க பார்க்கின்றன.
மழை நீரை யாரும் உபயோகிக்க கூடாது , உங்கள் தண்ணீர் வரியில் அது அடங்காது.
No comments:
Post a Comment